தீபாவளி : அச்சு முறுக்கு தயாரிக்கும் பணி தீவிரம்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அச்சு முறுக்கு தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வந்தது பண்டிகைகள் தான் என்று சொல்ல வேண்டும்... விழாக் காலங்களில் பலகாரங்கள் தயாரிப்பு என்பதே திருவிழா போலத்தான். அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அச்சுமுறுக்கு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எல்லா நாட்களிலும் சாப்பிட ஏற்றது இது என்பதால் இதற்கான வரவேற்பு மக்களிடம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். குறைவான அளவில் இனிப்புச்சுவை கொண்ட தின்பண்டம் என்பதால் இதனை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ஆர்வமாக வாங்கிச் சாப்பிடுவார்கள்.
தீபாவளி பண்டிகைக்காக அச்சுமுறுக்கு வாங்க ஏராளமானோர் ஆர்டர்களை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக கன்னியாகுமரியில் அச்சுமுறுக்கு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Next Story