விளையாட்டு வீரர்களுக்கான உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த உயர்மட்ட குழு அமைப்பு
விளையாட்டு வீரர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க நெறிமுறைகளை உருவாக்க தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் உள்ஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதை அமல்படுத்த உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் 12 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Next Story