கொலை மிரட்டல் : ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமி மீது நடவடிக்கை தேவை

திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான பா.ஜ.க. பிரமுகரின் மனைவி கட்டளை சுவாமி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
கொலை மிரட்டல் : ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமி மீது நடவடிக்கை தேவை
x
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் சிங்க நீர்குளத்தில் தூர் வாரும் பணி முடிந்து தண்ணீர் வந்ததை அடுத்து, பூஜை செய்வதற்காக திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை சுவாமி நாத தம்பிரான் மற்றும் தூர் வரும் பணியை மேற்கொண்ட சிம்மராஜன் ஆகியோர் குளத்திற்கு வந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க.வின் நகர தலைவர் ராஜீ தகாத வார்த்தைகளால் பேசி இருவருக்கும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜீ மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ராஜீயின் மனைவி கண்மணி, கட்டளை சுவாமிகள், அடியாட்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.   

Next Story

மேலும் செய்திகள்