வாழைத்தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கோவை மேட்டுப்பாளையம் அருகே வாழைத்தோட்டத்தில் நள்ளிரவில் நுழைந்த காட்டுயானைகள் சுமார் மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான வாழைகளை சேதப்படுத்தியது.
காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, குறைந்த அளவிலான இழப்பீடு வழங்குவதாக வனத்துறையினர் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. இதனை அடுத்து காவல்துறையினர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Next Story