கேஸ் சிலிண்டரில் கசிவு - வெடித்ததில் வீடுகளில் தீ..!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தாபுரத்தில் குடிசை வீட்டில் வசித்து வரும் சாமு என்பவரின் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
கேஸ் சிலிண்டரில் கசிவு - வெடித்ததில் வீடுகளில் தீ..!
x
பக்கத்தில் இருந்த 6 வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியதில் அந்த வீடுகளும் எரிய தொடங்கியது. அக்கம்பக்கத்து மக்கள் குடங்களில் தண்ணீர் பிடித்து ஊற்றி தீயை அணைக்க முயன்ற நிலையில், விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அனைத்தனர். விபத்தில், 6 வீடுகளும், முழுமையாக எரிந்து விட்டதால், அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின. 

Next Story

மேலும் செய்திகள்