மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - ஓய்வு பெற்ற ஆசிரியர் தலைமறைவு

வேலூர் மாவட்டத்தில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஓய்வு பெற்ற ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - ஓய்வு பெற்ற ஆசிரியர் தலைமறைவு
x
காட்பாடி அடுத்த ஒட்டந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி சாந்தா, உள்ளிப்புதூர் கூட்டுறவு பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிரபாகர் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். சாந்தா கூச்சலிட அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பிரபாகரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்