18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை - சத்தியநாராயணன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை என்றும், சபாநாயகர் நெறி தவறவில்லை என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை - சத்தியநாராயணன்
x
* 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை என்றும்,  சபாநாயகர் நெறி தவறவில்லை என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். 

* அரசியல் சாசனம், 10வது அட்டவணை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

* எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில், ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சரவைக்கு எந்த ஒரு பங்கும் இல்லை என 10வது அட்டவணை  தெளிவாகக் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

* 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் மீது ஆளுனர் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார் என, இந்த நீதிமன்றம், கற்பனையாக ஆராய முடியாது எனவும்,
எம்.எல்.ஏ., ஜக்கையனிடம் விசாரணை நடத்தியதன் மூலம், 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இருந்து கொண்டு விளக்கம் அளிக்காமல் உள்ளனரா என்பதை சபாநாயகர் உறுதி செய்திருக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

* ஜக்கையன், தன் கருத்தை மறுதலித்ததால் அவர் மீதான குற்றச்சாட்டை சபாநாயகர் தனியாக பரிசீலித்து இருக்கலாம் எனவும், இந்த விவகாரத்தில், ஆரம்பம் முதல் அனைத்து பிரச்சனைகளையும், ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையிலேயே, 18 பேரை தகுதி நீக்கம் செய்து  சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

* அவரது இந்த முடிவில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இந்த வழக்கில் ஏற்கனவே இரு நீதிபதிகள் பிறப்பித்த இரு வேறு தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல், வழக்கின் ஆதாரங்கள், வாதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, சபாநாயகரின் உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை,   நெறி தவறவில்லை என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகிறது என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்