பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி

கோவையில் ஆதிவாசி பள்ளி குழந்தைகளுடன் பட்டாசுகள் இல்லாத பசுமை தீபாவளியை கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடினார்கள்.
பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி
x
கோவை மலைப்பகுதியிலுள்ள ஆனைக்கட்டி, மாங்கரை, கொண்டனூர், தூமனூர், சேம்புகரை உள்ளிட்ட மலைக்கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட ஆதிவாசி குழந்தைகள் படித்து வருகின்றனர். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள ஈகை குழு சார்பாக கல்லூரி மாணவ மாணவிகள் இந்த பள்ளி குழந்தைகளுடன் இணைந்து, பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளியை கொண்டாடினர். அவர்களுடன் சேர்ந்து பாட்டு பாடி, பாரம்பரிய நடனங்கள் ஆடி மகிழ்ந்தனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விதைகள் அடங்கிய பசுமை பென்சிலும் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்