சிலைகள் மீட்கப்பட்ட விவகாரம்: "ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 10 பேர் தலைமறைவு" - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்

சிலைகள் மீட்கப்பட்ட வழக்கில் தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் உட்பட 10 பேர்கள் தலைமறைவாக உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிலைகள் மீட்கப்பட்ட விவகாரம்: ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 10 பேர் தலைமறைவு - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்
x
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீடு மற்றும் அரண்மனைகளில், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 250-க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக அவருடைய தொழில் நண்பரான கிரண்ராவின், போயஸ் தோட்ட வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 23 தொன்மையான சிலைகளை பறிமுதல் செய்தனர். அடுத்தகட்டமாக தொழிலதிபர் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவ் இருவருக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது ஆனால் தற்போது வரை அவர்கள் ஆஜராகவில்லை.

இந்நிலையில், ரன்வீர்ஷா, கிரண்ராவ் மற்றும் அவர்களது ஊழியர்கள் என் 10 பேர் கடந்த ஒரு மாத காலமாக தலைமறைவாக உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்