இளைஞர் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் : 23 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை

சென்னையில் மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்க விடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையிலும் அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.
இளைஞர் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் :  23 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை
x
* சென்னையில் மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்க விடுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மாஞ்சா கயிறு தடவிய காற்றாடி பறக்கவிடுவோர் மீது  சென்னை காவல்துறையும்  கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 

* இந்தநிலையில் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்து படுகாயம் அடைந்துள்ளார் சென்னை கொளத்தூரை சேர்ந்த இளைஞர் லோகேஷ் குமார். 

* கடந்த வியாழக்கிழமை மாலை வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரி சாலையில் தனது நண்பருடன் லோகேஷ் குமார் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென மாஞ்சா தடவிய நூல் ஒன்று   எங்கிருந்தோ பறந்து வந்து லோகேஷ் குமாரின் கழுத்தில் பட்டு  அறுத்துள்ளது.

* இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் குமாருக்கு கழுத்தில் 23 தையல்கள் போடப்பட்டுள்ளது. 

* 3 நாள் சிகிச்சை முடிந்த பின்பு வீடு திரும்பிய லோகேஷ் குமாருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கழுத்திலிருந்து ரத்த கசிவு ஏற்பட்டதால் , தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* காயத்தின் அளவு கழுத்தில் மிக ஆழமாக இருப்பதால்  பேச முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார் லோகேஷ் குமார்.லோகேஷ் குமார் சார்பாக ஓட்டேரி காவல் நிலையத்தில் மாஞ்சா தடவி பறக்கவிட்டு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது. 

* இதனை விசாரித்த ஓட்டேரி போலீசார், மாஞ்சா தடவி நூலை பறக்கவிட்ட புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த 18 வயது நவீன் குமார்  மற்றும்  16 வயது நிரம்பிய சிறுவன் ஒருவனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

* சென்னையில் 2011 ஆம் ஆண்டில் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில்  4 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 2015 ஆம் ஆண்டில் அஜய் என்ற 5 வயது சிறுவனும் 2107 ஆம் ஆண்டில் ஒருவரும் உயரிழந்துள்ளனர்.

* சென்னை மக்களை மாஞ்சா கயிறு பயத்திலிருந்து காக்க வேண்டிய முழு பொறுப்பு சென்னை காவல்துறைக்கு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்