மீனவர்கள் பிரச்சனை : முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்

மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், உடனடியாக தலையிடுமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர்கள் பிரச்சனை : முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்
x
* முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் 26 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். 

* மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக, கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதியில் இருந்து அடுத்தடுத்து கடிதங்களை எழுதி இருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி தூதரக ரீதியாக இந்தியா எடுத்து வந்த நடவடிக்கைகளை இலங்கை அரசின் சமீபத்திய செயல்பாடுகள் செல்லாததாக்கி விட்டதாகவும், இதனால், தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

* எனவே, வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாக இலங்கை அரசுக்கு உயர்மட்ட அளவில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இலங்கை சிறைகளில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்