மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை..!

தூத்துக்குடியில் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை..!
x
வெளிநாட்டில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவர், கடந்த மே மாதம் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த பின் மீண்டும் வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும் மனைவி கங்காவிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கங்கா வேலைக்கு சென்று திரும்பிய பின் அவர்களது 6 வயது மகளான சன்பிகா வாந்தி எடுப்பதை பார்த்து கேட்டபோது, குழந்தைக்கு எலி மருந்து கொடுத்து தானும் எலி மருந்து சாப்பிட்டு விட்டதாக மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த சிறுமி சன்பிகா காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மகேஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.  

Next Story

மேலும் செய்திகள்