தமிழகம் முழுவதும் பரவலாக மழை..!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை..!
x
திருவண்ணாமலை 
பல பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் ஏரிகள், குளங்கள் கிணறுகளில் தண்ணீரின் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை
வேலூர் மாவட்டம் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதிகளில் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் வடுவூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் டெல்டா விவசாயிகள் மகழ்ச்சியில் உள்ளனர்.

கொடைக்கானல் 
கொடைக்கானல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் சிரமம் அடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்