இளம்பெண் மீது ஆசிட் வீச்சு : தொழிலாளி கைது

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த இளம்பெண் காயத்திரி என்பவர் மீது ஆசிட் வீசியதாக மரம் அறுக்கும் தொழிலாளி சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம்பெண் மீது ஆசிட் வீச்சு : தொழிலாளி கைது
x
எஸ். பாலம்பட்டி என்ற இடத்தில் நிகழ்ந்தது. ஆட்டோ டிரைவர் பாலமுருகன் என்பவரின் மனைவியான காயத்திரி, கணவரை பிரிந்து 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். இதனிடையே, மரம் அறுக்கும் தொழிலாளியான சீனிவாசனுடன் காயத்திரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெற்றோர் அறிவுறுத்தலின்படி பேசுவதை அவர் நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்து காயத்திரி மீது சீனிவாசன் ஆசிட் வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. படுகாயமடைந்த காயத்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்