அரியலூர் : பள்ளி பேருந்து மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் சோழன்குடிகாடு பகுதியில் 2 வயது குழந்தை ஒன்று பள்ளிப் பேருந்தின் சக்கரத்தின் சிக்கி உயிரிழந்தது.
அரியலூர் : பள்ளி  பேருந்து மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு
x
அரியலூர் மாவட்டம்  சோழன்குடிகாடு பகுதியில், 2 வயது குழந்தை ஒன்று பள்ளிப் பேருந்தின் சக்கரத்தின் சிக்கி உயிரிழந்தது.  கலைச்செல்வி என்பவர் தன்னுடைய  மகனை, பள்ளி பேருந்தில் ஏற்றி விட வந்த போது, உடன் தனது இரண்டு வயது குழந்தை நித்தீஷையும் அழைத்து வந்துள்ளார். அப்போழுது பேருந்து திரும்பும் போது, எதிர்பாராதவிதமாக, நித்தீஷ் மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே நித்தீஷின் உயிர் பிரிந்தது. தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்