கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் ஆஜராக வேண்டும் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி திட்டவட்டம்

பழங்கால சிலைகள் கிடைத்த விவகாரத்தில் கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கும்பகோணத்தில் ஆஜராகியே தீர வேண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி. சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் ஆஜராக வேண்டும் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி திட்டவட்டம்
x
சென்னையில் தோண்டத் தோண்ட கிடைத்த சிலைகள் தொடர்பான விசாரணைக்காக கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் தொழில் அதிபர் கிரண்ராவின் பணியாளர் நரேன் என்பவர் மட்டும் ஆஜரானார். மற்ற 11 பேர் வரவில்லை. அவர்கள் சார்பாக வழக்கறிஞர் மனு அளித்தார். அதை ஏற்காத சிலை தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் ஆஜராக வேண்டும் என கூறினர்   இந்த நிலையில்  ஆஜரான நரேனை ரகசிய இடத்தில் வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மற்றும் டிஎஸ்பி சுந்தரம் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கிரண் ராவின் மேலாளர்கள் தயாநிதி, செந்தில் உள்ளிட்ட 11 பேர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் தயாரிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்