அனுமதி இல்லாமல் 'குடும்ப கட்டுப்பாடு' செய்யப்பட்டதாக புகார்

தங்களிடம் அனுமதி பெறாமல், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டதாக ஒரு தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி இல்லாமல் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதாக புகார்
x
கடலூர் மாவட்டம் பாச்சாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேஷ், அஸ்வினி தம்பதி. இவர்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

குழந்தை பிறந்த 2 நாட்களுக்கு பிறகு, குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதால் வேகமாக நடக்க வேண்டாம் என அஸ்வினியிடம் செவிலியர்கள் கூறியுள்ளனர். அதை கேட்டு அஸ்வினி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, உரிய அனுமதி பெற்று தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தை பிறக்க செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மட்டுமே ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டதாகவும், குடும்ப கட்டுப்பாடு குறித்து தன்னிடம் கூறவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்