திருச்சியிலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு, 4 மணிநேர போராட்டத்திற்கு பின் மும்பையில் தரையிறங்கியது

திருச்சி விமான நிலையத்தில், ஓடுதள சுற்று சுவரை உடைத்து கொண்டு 136 பயணிகளுடன் பறந்து சென்ற விமானம் குறித்த தகவல் தெரியாததால் 4 மணி நேரத்திற்கும் ​​மேலாக பரபரப்பு நீடித்தது.
திருச்சியிலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு, 4 மணிநேர போராட்டத்திற்கு பின் மும்பையில் தரையிறங்கியது
x
திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1.20 மணியளவில், 136 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் துபாய் நோக்கி புறப்பட்டது. 

ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட விமானம், இயந்திர கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலைய சுற்றுச்சுவரை இடித்து கொண்டு பறந்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால்  விமானத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து எந்த தகவலும் தெரியாததால் பயணிகளின் உறவினர்கள் அச்சத்ததில் ஆழ்ந்தனர். 

இந்நிலையில் நடுவானில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பறந்த அந்த விமானம், மும்பை விமான நிலையத்தில் இன்று காலை 5.45 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் நிம்மதியடைந்தனர். இதனிடையே,
இந்த சம்பவத்திற்கு காரணம் இயந்திர கோளாறா,  ஓடுதளத்தில் பிரச்சினையா அல்லது விமானியின் கவனக்குறைவா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்களது உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


விமான விபத்து... காரணம் என்ன? - விமான நிலைய நிர்வாக ஆணையர் குணசேகரன் விளக்கம் 


விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் - திருச்சி விமான நிலைய நிர்வாக ஆணையர்


Next Story

மேலும் செய்திகள்