இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
பதிவு : அக்டோபர் 11, 2018, 10:49 AM
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படு நிலையில் இன்று ஒரு பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்டிருந்தது.
சென்னை அடுத்துள்ள போரூர் காரம்பாக்கத்தில் உள்ள கால்வாய் ஓரம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் ரத்னகுமார் சென்று பார்த்தபோது பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை இங்கு வீசி சென்றது யார் என்பது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தை பெறவும் கடந்த 2011-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன்படி, ஆண்டுதோறும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாட்டப்பட்டு வருகிறது. 

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், போரூர் கால்வாய் ஓரம் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் குழந்தைகளின் நலனுக்காகவும், பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக மத்திய - மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் சாலையோரம், புதரில், கால்வாயில் பெண் குழந்தைகள் வீசப்படும் சம்பவங்கள் தொடர்கிறது. 

அதுமட்டுமின்றி, சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்களும் நாள்தோறும் தொடர்வது பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பெண் குழந்தைகளை காக்க, மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது  சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது. 

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை - மக்களிடம் கருத்து கேட்கும் தி.மு.க

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க, பொதுமக்களிடம் தி.மு.க கருத்து கேட்டுள்ளது.

10 views

தேசிய பூங்காவில் குவியும் பார்வையாளர்கள்

கண்களை கவரும் நெருப்பு அருவி

33 views

வீரமரணம் அடைந்த கேரள வீரர் வசந்தகுமார் குடும்பத்தினருக்கு கேரள முதலமைச்சர் ஆறுதல்

ரூ.25 லட்சம் நிதி, ஒருவருக்கு அரசு வேலை :கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

36 views

ஆஸ்கருக்கு தயாராகும் அரங்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

46 views

ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்

ஒரே நாளில் 2,000 பேர் குவிந்தனர்

49 views

சவுதி இளவரசருக்கு விருந்தளித்த குடியரசு தலைவர் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீடு 2 லட்சமாக அதிகரிப்பு : 850 இந்திய கைதிகளை விடுவிக்க இளவரசர் உத்தரவு

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.