"பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால்

தனி மனித வாழ்க்கையில் மட்டுமில்லாமல், பொது வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால்
x
சென்னை மியூசிக் அகாடமியில் ஸ்ரீ சனாதனா தர்மா வித்யாலயா பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,  வாழ்க்கையில் எளிமையாக இருக்க வேண்டும் என்றார்.  எளிமையாக இருந்தால் தான் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்லலாம் என்றும் அவர் கூறினார்.    அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்பது என்பது மனித தன்மை என்று கூறிய ஆளுநர், ஆனால் இன்றைய காலத்தில் நம் கண் முன்னே நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்காமல் கடந்து செல்வதாக குறிபிட்டார். நம்மிடையே மனித தன்மை  குறைந்து வருவதாகவும் பன்வாரிலால் புரோஹித் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்