கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மனு - போலீஸ் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு

கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மனு - போலீஸ் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு
கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மனு - போலீஸ் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு
x
இந்து கோவில்கள் குறித்து விமர்சித்து பேசியதாக குமரி,கோட்டாறு போலீசார் 
பதிவு செய்த வழக்கை ரத்து செய்யகோரி  கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். 
இந்து மதத்தை தவறான நோக்கத்தில்  விமர்சித்து பேசவில்லை என்றும்,  வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  மனுதாரர் பொது வெளியில் பேசியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் .எதன் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து போலீஸ் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்