விபரீதத்தில் முடிந்த குடும்ப சண்டை : மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்
பதிவு : அக்டோபர் 07, 2018, 01:41 PM
திருவெறும்பூர் அருகே குடும்ப சண்டையில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூரை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த சங்கர் சகாயராஜ் என்பவருக்கும், தஞ்சைமாவட்டம் கீழ திருப்பந்துருத்தியை சேர்ந்த ஜெஸ்சிந்தா ஜோஸ்பினுக்கும்  கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்தவாரம் நடந்த குடும்ப பிரச்சினையில் கோபித்துக்கொண்டு தனது அப்பா வீட்டுக்கு சென்ற ஜெஸ்சிந்தா ஜோஸ்பின், இரு தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளார்.  

இந்த நிலையில் நேற்று இரவு நடந்த குடும்ப சண்டையில், , ஜெஸ்சிந்தா ஜோஸ்பின் தலையை துண்டாக வெட்டிய சங்கர் சகாயராஜ், பின்னர் இரவு முழுவதும் மனைவியின் உடல் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார்.

இதனையடுத்து காலையில் வீட்டை விட்டு வெளியே வந்த சங்கர் சகாயராஜின் உடலில் இருந்த ரத்த கரையை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஜெஸ்சிந்தா ஜோஸ்பின் பிணமாக கிடந்துள்ளார்.  பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சங்கர் சகாயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் சகாயராஜின் தங்கை ஆரோக்கிய சுபாவையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கரூர் : அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

78 views

அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம் மேலப்பாளையம், அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

68 views

கரூர் சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

87 views

ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் நகை ஏஜெண்ட் ஓட்டம்

கரூரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகளுடன் வடநாட்டு நகை ஏஜெண்ட் தலைமறைவானதை அடுத்து, கரூர் டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

46 views

பிற செய்திகள்

அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, அகமதபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.

3 views

10 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு? - சத்யபிரதா சாஹூ விளக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் என்ற தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

69 views

விமர்சையாக நடைபெற்ற கச்சபேஸ்வரர் கோயில் தேர் திருவிழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

15 views

நவ்ஜாத் சிங் சித்துவுக்கு 72 மணிநேரத்துக்கு பிரசாரம் செய்ய தடை

பீகார் பிரசாரத்தில் கண்டனத்துக்குரிய வகையில் நவ்ஜாத் சிங் சித்து பேசியதாக புகார்.

20 views

உள்ளாட்சி தேர்தலை தாமதம் இன்றி நடத்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை கால தாமதம் இன்றி நடத்திட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

22 views

வாரணாசியில் மோடிக்கு எதிராக ஷாலினி யாதவ் போட்டி

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார்.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.