சப்தமில்லாமல் சாதனை படைக்கும் கால்பந்தாட்ட அணி - இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வட சென்னை வீரர்கள்
பதிவு : அக்டோபர் 04, 2018, 03:17 PM
மெட்ராஸ் திரைப் படத்தில் வரும் இளைஞர்கள் கால்பந்தாட்ட வீரர்கள். வடசென்னையின் அடிதடி கலாச்சாரத்தை மாற்ற முயற்சிக்கும் ஒருவரின் கதை அது. அதை நிஜத்தில் செய்து சாதனை படைக்கும் இளைஞர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு இது.
வடசென்னை என்றாலே கொலை, கொள்ளை, ரவுடித்தனம் என்பது தான் நினைவிற்கு வரும்... இதனால், அங்கு இருக்கும் பல திறமையான வீர‌ர்கள், வீராங்கணைகள் வெளி உலகிற்கு தெரிவதில்லை... குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீர‌ர்கள் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார்கள்.வியாசர்பாடி இளைஞர்களை  கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம்கொண்ட தங்கராஜ், உமாபதி, சுரேஷ் ஆகிய மூவரும் தங்களுக்கு தெரிந்த கால்பந்தாட்டத்தை அதற்கு கருவியாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் வியாசர்பாடி முல்லை நகரின் கால்பந்தாட்ட மைதானத்தில், இலவச பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களை பற்றி அறிந்து கொள்வதற்காக வியாசர்பாடியின் முல்லைநகர் கால்பந்தாட்ட மைதானத்திற்கு சென்றோம்.ஆண்களோடு, இளம்பெண்களும், சிறுமிகளும்  ஆர்வமுடன் கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை காண முடிந்த‌து. இதுகுறித்து அங்கிருந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் கேட்டபோது,  குறைவான ஆடை அணிந்து விளையாட வேண்டும் என்பதால் ஆரம்பத்தில் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், ஒழுக்கத்துடன், விளையாட்டில் சிறந்து விளங்கி, எங்களின் சாதனைகள் மூலம் அவர்களின் பார்வையை மாற்றினோம் என்கிறார் பெருமையுடன்.இந்தியாவை தாண்டி, ஸ்வீடன், இங்கிலாந்து, ஈரான் என இந்த வியாசர்பாடி வீரர்களின் சாதனைப் பட்டியலை பயிற்சியாளர் தங்கராஜும், தியாகும் கூற நம்மை ஆச்சர்யம் ஆட்கொண்டது. விளையாட்டு சாதனைகள் ஒருபுறமென்றால், தனி மனித ஒழுக்கத்துக்கு இவர்கள் தரும் முக்கியத்துவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தூய தமிழில் பேசுவது, புகையிலை, போதை பொருட்களை பயன்படுத்துவதில்லை, கல்வி மற்றும் ஒழுக்கத்துக்கு பிறகுதான் விளையாட்டு என்பதுதான் இவர்களுக்கு விதிக்கப்படும் முக்கிய முதல் நிபந்தனை. வியாசர்பாடி மீது தற்போது பதிந்து விட்ட அடையாளத்தை கால்பந்தாட்டம் மூலம் உதைத்து தள்ள நினைக்கும் இளைஞர்கள் நிச்சயம் இன்றைய நம்பிக்கை நட்சத்திரங்கள்தான் என்பதில் ஐயமில்லை... தொடர்புடைய செய்திகள்

கிளிஃப் டைவிங் என்றால் என்ன?

உயிரை பணயம் வைக்கும் ஒரு சாகச விளையாட்டு பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு..

76 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து தொடரில், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

135 views

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள்

394 views

தமது பேச்சால், ஆயிரக்கணக்கான ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைத்த வீரர்

சமூக வலை தளத்தில், கை கூப்பி அழைப்பு - விராத் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆதரவு...

548 views

கால்பந்து: இந்திய கேப்டனின் 100வது போட்டி

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செற்றி, தனது 100வது சர்வதேச போட்டியில் இன்று களம் காணுகிறார்

212 views

பிற செய்திகள்

சந்திரயான் 2 வெற்றி - ஸ்டாலின் வாழ்த்து

சந்திரயான்- 2 வெற்றிக்கு தி.மு க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8 views

வேலூர் மக்களவை தேர்தலில் கே.எஸ். அழகிரி சமரச முயற்சி வெற்றி - வேட்புமனுவை வாபஸ் பெற்றார் வாலாஜா அசேன்

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் நிர்வாகி வாலாஜா அசேன் தனது மனுவை கடைசி நிமிடத்தில் வாபஸ் பெற்றார்.

32 views

ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் - திருமணத்திற்கு நகை வாங்க வந்தவர்களிடம் பணம் பறிமுதல்

திருமணத்துக்கு நகை வாங்க வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

13 views

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு துணை இராணுவம் , காவல்துறையினர் அணிவகுப்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

7 views

வேலூரில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

8 views

அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.