ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா

கும்பகோணம் அருகே ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா
x
கும்பகோணம் அருகே ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை இரவு குருபெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவிற்கு தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால், அதற்கான முன்னேர்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு ஆலங்குடிக்கு தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்