தொழிலதிபர் ரன்வீர்ஷா பண்ணை வீட்டில் சோதனை - 134 சிலைகள் பறிமுதல்

சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதிரடி வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
தொழிலதிபர் ரன்வீர்ஷா பண்ணை வீட்டில் சோதனை - 134 சிலைகள் பறிமுதல்
x
திருவாரூர் மற்றும் திருவையாறு அரண்மனைகளில் நடத்திய அதிரடி வேட்டையை தொடர்ந்து, மேல்மருவத்தூரை அடுத்த ராமாவரம் அருகே உள்ள மோகவல்வாடி என்ற கிராமத்தில், இயற்கை சூழலில் அமைந்துள்ள பண்ணை வீட்டில், ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், காலையில் அதிரடியாக நுழைந்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 84 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, சென்னையை அடுத்த படப்பை அருகே உள்ள வைப்பூர் ஊராட்சிக்கு சொந்தமான குளங்களசேரி என்ற இடத்தில் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான பண்ணை தோட்டத்திலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, 50 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. Next Story

மேலும் செய்திகள்