ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் கட்டுப்பாடு : தினமும் ரூ.20,000 மட்டுமே எடுக்க முடியும்

குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் தினமும் பணம் எடுக்கும் உச்சவரம்பு, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது.
ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் கட்டுப்பாடு : தினமும் ரூ.20,000 மட்டுமே எடுக்க முடியும்
x
* இதுதொடர்பான சுற்றறிக்கை ஸ்டேட் வங்கியின் அனைத்து கிளை மேலாளர்களுக்கும், வங்கியின் நிர்வாக அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு போலியான கார்டுகள் மூலம் பணத்தை திருடுவது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இதன்மூலம், ஏ.டி.எம்.களில் தினமும் பணம் எடுக்கும் உச்சவரம்பு, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. இந்த நடைமுறை அக்டோபர் 31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்