தனது பெயரில் போலி கார் பாஸ் வைத்தவரை கையும் களவுமாகப் பிடித்த ஆறுகுட்டி எம்.எல்.ஏ

சென்னை விமான நிலையத்தில் தனது பெயரில் காருக்கான போலி சட்டமன்ற உறுப்பினர் பாஸை வைத்திருந்தவருடன் அதிமுக எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனது பெயரில் போலி கார் பாஸ் வைத்தவரை கையும் களவுமாகப் பிடித்த ஆறுகுட்டி எம்.எல்.ஏ
x
சென்னை விமான நிலையத்தில் தனது பெயரில் காருக்கான போலி சட்டமன்ற உறுப்பினர் பாஸை வைத்திருந்தவருடன் அதிமுக எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் இருந்து விமானம் முலம் அவர் சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் அ.ம.மு.க. பிரமுகர் மாணிக்கம் என்பவரது காரில், தனது பெயரில் கார் பாஸ் இருந்ததை கண்டார். இதையடுத்து, மாணிக்கத்திடம் தன்னுடைய கார் பாசை போலியாக தந்தது யார்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது பற்றி போலீசில் புகார் அளிக்க உள்ளதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்