திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை...

சிலை கடத்தல் தொடர்பாக திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் பொன்.மாணிக்கவேல் அதிரடி சோதனை நடத்தினார்.
திருவையாறில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை...
x
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட சிலைகள், கற்தூண்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் தஞ்சை சென்ற பொன் மாணிக்கவேல் பெரிய கோயிலில் 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருவையாறு காவிரி கரையில் உள்ள பழமையான அரண்மனைக்கு சென்று சோதனை நடத்தினார். மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அரண்மனை ரன்வீர்ஷாவுக்கு சொந்தமானது. இதேபோல் ரன்வீர்ஷாவின் அனைத்து பங்களாக்களிலும் அதிரடி ஆய்வு நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்