மது குடிக்க பணம் தராததால் கட்டையால் அடித்து மனைவி கொலை

நெல்லையில் மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை கட்டையால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது குடிக்க பணம் தராததால் கட்டையால் அடித்து மனைவி கொலை
x
நெல்லையில் மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை கட்டையால் அடித்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூர் கலையரங்கு தெருவை சேர்ந்த நம்பி, மது குடித்து விட்டு, அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு மது குடிக்க பணம் கேட்டதால், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த நம்பி வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் மனைவி பேச்சியம்மாளை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நம்பி, பின்னர் வள்ளியூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்