படுஜோராக விற்பனையாகும் தென்னங்குருத்து...

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தென்னங்குருத்து விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது...
படுஜோராக விற்பனையாகும் தென்னங்குருத்து...
x
தென்னை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன் அளிக்கின்றன. இளநீர், தேங்காய், பதநீர், கள் என அதில் இருந்து ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தென்னங்குருத்து விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. வயதான அல்லது நோய் தாக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் போது அதில் உள்ள மருத்துவ குணம் கொண்ட குருத்துகளை சாப்பிடும் நடைமுறை பழக்கத்தில் உள்ளது. அது போல் வெட்டப்படும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் குருத்துக்களை சேகரித்து கரூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் விற்பனை செய்து வருகிறார் ரவிக்குமார் என்ற பெரியவர். கர்ப்பபை கோளாறு, வயிற்று புண், பசியின்மை உள்ளிட்ட நோய்களுக்கு தென்னங் குருத்து நல்ல மருந்து எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தேடி வந்து தென்னங்குருத்துகளை வாங்கி செல்கின்றனர். உள்ளூர் வாசிகள் அங்கே அமர்ந்து சாப்பிட்டு செல்கின்றனர். தென்னங் குருத்துக்களை சாப்பிடுவதால் வயிற்றுப்புண் உள்ளிட்ட பல பிரச்சினைகள் , இருந்த இடம் தெரியாமல் சென்று விடுகிறது என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்