சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு உத்தரவு

சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 13 கோடியே 22 லட்சம் ரூபாயை வழங்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு உத்தரவு
x
இரட்டை இடை சின்னத்தை கைப்பற்ற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 5 பேர்  பெயர்களில் தேனாம்பேட்டை கிளையில் உள்ள 13 கோடியே 22 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை, அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கனரா வங்கி தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் முடக்கப்பட்ட சொத்தை புகார்தாரரிடம் கொடுப்பது குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என நீதிபதி கருத்து தெரிவித்தார். மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்