மொகரம் பண்டிகை: பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்

மொகரம் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பள்ளிவாசல் முன்பு இந்துக்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மொகரம் பண்டிகை: பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்
x
மொகரம் பண்டிகை: பள்ளிவாசல் முன்பு தீக்குழி இறங்கிய இந்துக்கள்

மொகரம் பண்டிகை தினத்தில், இஸ்லாமியர்கள் தங்களை வருத்திக் கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில், திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் நடைபெற்ற மொகரம் பண்டிகை தினத்தில், இந்துக்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிராமத்தின் நடுவே உள்ள பாத்திமா பள்ளிவாசல் முன்பு கூடிய இந்துக்கள், தீக்குழி இறங்கி நேர்க்கடன் செலுத்தினர். நோய்கள் அண்டாது என்ற நம்பிக்கையில், ஆண்களும், பெண்களும் தலையில் தீ கங்குகளை அள்ளிக்கொட்டினர். முன்னதாக தீக்குழி இறங்கிய பக்தர்களுக்கு, இஸ்லாமிய பெரியவர் திருநீரு பூசி அருளாசி வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்துக்களும் பங்கேற்ற மொஹரம் திருவிழா

கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தில் இஸ்லாமிய மக்கள் மொஹரம் பண்டிகையை பல ஆண்டுகளாக இந்துக்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உப்பு, மிளகு போன்றவற்றை கரகத்தின் மீது வீசி தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர் தீக் குண்டத்தில் ஆண்களும், பெண்களும் இறங்கி வழிபட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்