"ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை" - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் கொலை செய்யவில்லை என்று 27ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் ஒருவரான சாந்தன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்
x
1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி, ஸ்ரீ பெரும்புதூரில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த 7 பேரில் ஒருவரான சாந்தன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதியுள்ள 4 பக்க கடிதத்தில், பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார். 

* விடுதலைப்புலிகள் அமைப்பில் தாம் உறுப்பினராக இருந்தாக குறிப்பிட்டு உள்ள சாந்தன், இந்தியாவில், அப்போது, அந்த அமைப்புக்கு  தடை விதிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.

* ராஜீவ்காந்தியை தாம் கொல்லவில்லை என கூறியுள்ள சாந்தன், இந்த படுகொலையை தாம் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
* 1991 - ல் தாம் கைது செய்யப்பட்டபோது,  நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவர், வேறொரு சாந்தன் புகைப்படத்தை  காட்டியதை இந்த கடிதத்தில் அவர் நினைவு கூர்ந்துள்ளார். 

* வயதான தாய்க்கு செய்ய வேண்டிய கடமை தமக்கு உள்ளதாகவும், எனவே, உறவுகளுடன் தம்மை சேர்த்து வைக்குமாறும் உருக்கமாக சாந்தன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

* எனவே, தம்முடைய சிறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து உலகில் சிறகடித்து பறக்க உதவுமாறு, இந்த கடிதத்தில் சாந்தன்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்