ஆசை வார்த்தை கூறி 2000தொழிலாளர்களை ஏமாற்றிய நூதன கொள்ளையன்

திருப்பூரில் ஆணும் பெண்ணும் ஜோடி சேர்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் நூதன முறையில் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசை வார்த்தை கூறி 2000தொழிலாளர்களை ஏமாற்றிய நூதன கொள்ளையன்
x
* மதுரையை சேர்ந்த ராஜேஷ்வரியும், கோவையை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் இணைந்து  திருப்பூரில் வீடு வீடாக சென்று தொழிலாளர்களிடம்  எல்.இ.டி கலர் டிவிக்களை குறைந்த விலையில் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.  

* அதற்காக தொழிலாளர்களிடம் முன்பணமும் பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக டிவி ஷோருமிற்கு அழைத்து சென்ற அவர்கள், தொழிலாளர்களின் சான்றிதழ்களை வைத்து டிவி ஆர்டர் செய்து அதற்கான ரசீதை தொழிலாளர்களிடம் கொடுத்துள்ளனர். 

* இதனால், அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் தங்களுக்கு தெரிந்த சக தொழிலாளர்களையும் சேர்த்துள்ளனர். 

* முழு பணம் கொடுக்கும் வரை டிவியை பத்திரமாக வைத்து கொள்வதாக கூறி வாங்கி சென்ற ராஜேஷ் மற்றும் ராஜேஷ்வரி, அதனை, திருட்டு தனமாக விற்று வந்துள்ளனர். 

* அதோடு பல தொழிலாளர்களிடம் கடனாக பணம் பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, பலரிடம் முன்பணம் பெற்றுள்ளது இந்த மோசடிஜோடி. 

* ஒருகட்டத்தில் தொழிலாளர்கள் கேள்வி கேட்க தொடங்கியதால், திடீரென ராஜேஷ் மற்றும் ராஜேஷ்வரி மாயமாகியுள்ளனர். இந்நிலையில், 25 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொலைக்காட்சிகள் தொழிலாளர்களின் சான்றிதழ்களில் பெறப்பட்டுள்ளதால், வாங்காத தொலைக்காட்சிக்கு மாதா மாதம் தவணை கட்டணம் செலுத்தும் நிலைக்கு தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.   


Next Story

மேலும் செய்திகள்