"அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு 2 % அகவிலைப்படி" - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு 2 % அகவிலைப்படி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
x
அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், சுமார் 18 லட்சம் பேர் பலன் பெறுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதன்படி,  7 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, இனி 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், உயற்பயிற்சி இயக்குநர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும். எனவே, மாதம் 314 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை, ஊதியம் கூடுதலாக கிடைக்கும்.  

குடும்ப ஓய்வூதியதாரர்களை பொறுத்தவரை, மாதம்157 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 250 ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும். இந்த கூடுதல் தவணை தொகை, முன்தேதியிட்டு, ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என்றும்,  இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 157 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி உயர்வு மூலம், சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்