எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம்...

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம்...
x
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றம், அதற்கான நீதிபதி பதவியேற்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணை உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளது. 

* சிறப்பு நீதிமன்றத்துக்கு ரூ. 97 லட்சம் நிதி விடுவிப்பு, 17 ஊழியர்கள் நியமனம். 

* எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீது மாவட்டங்களில் பதியப்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்

* தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது 260-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை
 





Next Story

மேலும் செய்திகள்