மணல் லாரி மோதி இளைஞர் பலி - லாரியை மறைத்து வைத்திருந்த பள்ளி சூறையாடல்...

உயிர்பலி ஏற்படுத்திய மணல் லாரி மறைத்து வைக்கப்பட்டிருந்த பள்ளியை பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணல் லாரி மோதி இளைஞர் பலி - லாரியை மறைத்து வைத்திருந்த பள்ளி சூறையாடல்...
x
நடுப்பட்டு ஆற்றில் இருந்து மணல் ஏற்றி கொண்டு திருப்பத்தூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற லாரி, இரு சக்கர வாகனம் மீது  மோதியதில் குமரேசன் என்ற இளைஞர் பலியானர். இந்நிலையில் அந்த லாரியை அப்பகுதியில் இருந்த தனியார் பள்ளியில் மறைத்து வைத்திருந்ததை அறிந்த இறந்தவரின் உறவினர்கள், பள்ளிக்குள் நுழைந்து கண்ணாடிகள், பூந்தொட்டிகளை உள்ளிட்டவற்றை அடித்து உடைத்தனர். இதனையடுத்து திருப்பத்தூர் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலிலும் உறவினர்கள் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்தங்கரை ஆய்வாளர் விபத்து ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.Next Story

மேலும் செய்திகள்