ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர்,சாய் பாபா...

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தென்றல்நகர் வெற்றி விநாயகர், சாய்பாபா கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கும் சாய்பாபாவுக்கும் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர்,சாய் பாபா...
x
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தென்றல்நகர் வெற்றி விநாயகர், சாய்பாபா கோவிலில்,  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கும் சாய்பாபாவுக்கும் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை வைத்து செய்யப்பட்ட விநாயர் மற்றும் சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விடிய,விடிய விநாயகர் ஊர்வலம்



கும்பகோணத்தில் பல்வேறு விநாயகர் கோவில்களில் விடிய, விடிய விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இலுப்பையடி விநாயகர் கோவில், பகவத் விநாயகர் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பலவிதமான அலங்காரங்களுடன் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம்



விநாயகர் சதுர்த்தியை ஒட்டி  நாகையில் 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. நீலாதாட்சி அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. கரகாட்டம், தப்பாட்டம், கேரளா கதகளி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

விநாயகருக்கு விடிய விடிய தேன் அபிசேகம்



கும்பகோணம் அடுத்த திருபுறம்பியம் சாட்சிநாதர் கோவிலில், பிரளயம் காத்த விநாயருக்கு விடிய, விடிய தேன் அபிஷேகம் செய்யும் விழா நடைபெற்றது. 108 லிட்டர் தேனை கொண்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  இந்த தேன் அபிஷேக விழாவில் தமிழகமெங்கும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்