விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்யாவின் "நட்புறவு விருது"
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், முன்னாள் உலக செஸ் சாம்பியனுமான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்ய அரசின் நட்புறவு விருது வழங்கப்பட்டது.
* இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், முன்னாள் உலக செஸ் சாம்பியனுமான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்ய அரசின் நட்புறவு விருது வழங்கப்பட்டது. சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில், தென்னிந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் செர்கெய் கோடோவ் இந்த விருதை வழங்கினார்.
* பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கத்தை தவற விட்ட லட்சுமணனின் திறமையை பாராட்டி மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கி உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் விரைவில் பரிசுத் தொகை அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Next Story

