அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் "அனிதா நினைவு நூலகம்"

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் நினைவாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் அனிதா நினைவு நூலகம்
x
அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் 38 லட்சம் ரூபாய் செலவில்  நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. நூலக திறப்பு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனிதாவின் சிலையை திறந்து வைத்த பின் பேசிய திருமாவளவன், நீட் தேர்வுக்கு எதிராக  தொடர்ந்து போராடப் போவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்