விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து, செப்டம்பர் 4-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?
x
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து, செப்டம்பர் 4-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது.

இதை ரத்து செய்ய கோரியும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் தலையிட  தடை விதிக்க கோரியும் விநாயகர் சதுர்த்தி மத்திய மண்டல குழு அறங்காவலர் ராமகோபாலன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விநாயகர் சதுர்ச்சி அன்று சிலைகள் வைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய விதிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என  மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலே புதிய 

விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் பந்தலுக்கு எப்படி மின் இணைப்பு வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி மகாதேவன், விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து செப்டம்பர்  4-ம் தேதிக்குள் பதிலளிக்க அரசு  தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்