புதிய உச்சத்தை தொட்ட டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
புதிய உச்சத்தை தொட்ட டீசல் விலை
x
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகளவு உயர்ந்து வருவதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் இன்று சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து 81 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்