குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த கஜேந்திரன் 3 மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு
x
கடந்த மே மாதம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து கிராம மக்கள் துரத்தி சென்று சரமாரியாக தாக்கியதில் ருக்மணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற கஜேந்திரன் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் குல தெய்வ கோயிலுக்கு சென்ற போது கடுமையாக தாக்கப்பட்டனர்.  

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 45 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த கஜேந்திரன் என்பவர் மருத்துவமனையில் 3 மாதம் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். கணவரை காப்பாற்ற பல லட்ச ரூபாய் கடன் வாங்கி செலவு செய்த கஜேந்திரனின் மனைவி பத்மாவதி செய்வதறியாமல் தவித்து நிற்கிறார். 2 பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசிக்கும் அவர் எதிர்காலத்தை எண்ணி கண் கலங்குகிறார்.

இதுவரை தங்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்கவில்லை என்று கூறும் பத்மாவதி, தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்