தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில், வரும் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில், அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது
தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு
x
வங்கக் கடலின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும், தமிழகத்தின் பல பகுதிகளில் வரும் 31-ஆம் தேதியும், செப்டம்பர் ஒன்றாம் தேதியும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பெய்யவிருக்கும் கனமழை காரணமாக, மேட்டூர் மற்றும் வைகை அணைகள் முழு கொள்ளளவை எட்டும் என்றும்,அணைகளை பாதுகாப்பதற்கும்,  நீரை வெளியேற்றுவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்