தமிழகத்தின் முதல் மரப்பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...

தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை வண்டலூர் அருகே, 2 கோடி ரூபாய் செலவில், மரப்பூங்கா ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல் மரப்பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...
x
வன மரபியல் வளங்களைப் பாதுகாக்கும் வகையில், சென்னை வண்டலூர் அருகே, மரப்பூங்கா ஒன்று அமைக்கப்படும் என சட்டப்பேரவையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதையடுத்து 2 கோடி ரூபாய் செலவில், சென்னை வண்டலூர் அருகே உருவாக்கப்பட்டுள்ள மரப்பூங்காவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். சுமார் 8 ஹெக்டேர் பரப்பிலான நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மரப்பூங்காவில், ருத்ராட்சம், சந்தனம், செம்மரம், வெடிப்பலா, வில்வம், கடுக்காய், நெல்லி, பன்னீர் உள்ளிட்ட 300 வகையான மரங்கள் நடப்பட்டுள்ளன. வண்டலுார் மலையில் இருந்து வெளியேறும் மழைநீர், தடுப்பணைகள் மூலம் சேமிக்கப்பட்டு, பூங்காவில் உள்ள மரங்களுக்கு பாய்ச்சப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், இந்த மரப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

"குரங்கணி தீவிபத்து மோசமான சம்பவம்"

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குரங்கணி தீ விபத்து தொடர்பான அதுல்யா மிஸ்ரா அறிக்கையின் அடிப்படையில், வனப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்