ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வங்கிப்பணம் ரூ. 5.75 கோடி கொள்ளை - 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலங்கவில்லை என தகவல்

சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் வங்கி பணம் ஐந்தே முக்கால் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸ் திணறி வருகின்றனர்.
ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வங்கிப்பணம் ரூ. 5.75 கோடி கொள்ளை - 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலங்கவில்லை என தகவல்
x
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் ஐ.ஓ.பி.வங்கிக்கு சொந்தமான பலகோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுக்கள் 228 பெட்டிகளில் கொண்டு செல்லப்பட்டன. நள்ளிரவில் ரயிலின் மேற்கூரையை உடைத்து பணம் கொண்டு செல்லப்பட்ட பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஐந்தே முக்கால் கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். 

ரயில் சென்னை எழும்பூர் வந்த பிறகுதான் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக முதலில் ரயில்வே போலீசார் விசாரித்தனர். பின்னர் அது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பணப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக சென்ற காவலர்கள்,வேன் ஓட்டுனர்கள்,வங்கி பணம் கையாண்டதில் தொடர்புடையவர்கள் மற்றும் ரயில்வே பார்சல் அலுவலக ஊழியர்கள்,போர்ட்டர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர்.

ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொள்ளை சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் ஆகியும் ஐந்தே முக்கால் கோடி ருபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்,ஓடும் ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் இதுவரை துப்புதுலங்கவில்லை என சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்