தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட தம்பதி...
பதிவு : ஆகஸ்ட் 05, 2018, 01:22 PM
பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தியடைந்த வயதான தம்பதியர் தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி- தனலட்சுமி தம்பதியினருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் அதே கிராமத்தில் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மகனும், மகளும் கவனிக்காதது ஒருபுறமிருக்க, என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்ததற்கு இழப்பீடும் இதுவரை வராததால், சாரங்கபாணி-தனலட்சுமி தம்பதியினர் வறுமையில் வாடி வருகின்றனர். பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தியடைந்த அவர்கள், தாங்கள் வசித்துவரும் வீட்டின் அருகே, சவக்குழி  தோண்டியுள்ளனர். பின்னர், உறவினர்களுக்கு போன் செய்த அவர்கள், கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் தோண்டிய குழியிலேயே தங்களது உடல்களை அடக்கம் செய்துவிடுமாறும் கூறியுள்ளனர். இதனிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், விரைந்து சென்று அந்த தம்பதியினரிடமும்  மகனிடமும்  விசாரணை நடத்தினர்.ஆனாலும் அதில் இன்னமும் தீர்வு கிடைக்க வில்லை. தள்ளாத வயதில் பிள்ளைகள் கைவிட்ட விரக்தியில் வறுமையில் வாடிய தம்பதியினர், தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியது. 


தொடர்புடைய செய்திகள்

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1562 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3706 views

பிற செய்திகள்

மனநலம் பாதித்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை

சென்னை - ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,குடல் இறக்கம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

225 views

மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு...

மேட்டூர் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

251 views

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்கு தடை கோரிய மனு - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

90 views

கொள்ளிடம் ஆற்று நீரை சேமிக்க தடுப்பணைகள் வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை

கொள்ளிடம் ஆற்று நீர், வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

31 views

வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மழை வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

17 views

வெறும் காகித விருதுகளால் எந்த பயனும் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

வெறும் காகிதங்களால் ஆன விருதுகளை வழங்குவதால் எந்த பயனும் இல்லை என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

1226 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.