டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அரசு பணிக்கான தேர்வுகள்: தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு ஏற்பாடு
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 07:55 AM
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயார் செய்ய ஏதுவாக உள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயார் செய்ய ஏதுவாக உள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகக்தில் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வு எழுதுவோரின் வசதிக்காக இலவச மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது அறிவியல் வரலாற்று குறிப்பு, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதுபவர்கள் குழுவாக விவாதித்து படிக்கும் படியான சூழலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக இலவச வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த சூழல் தேர்வில் வெற்றி பெற உறுதுணையாக இருந்ததாக  டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற ஆறுமுகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் இந்த மையத்தில் இருந்து 30 பேர் பங்கேற்றனர். இவர்களில் 20 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.