அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி
பதிவு : ஆகஸ்ட் 01, 2018, 09:02 AM
மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பள்ளி வளாக சுற்றுச்சுவரில் 3 மாணவிகள் குறித்து அவதூறாக எழுதப்பட்டதை கண்டு மனமுடைந்து இந்த முடிவை அவர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த 3 மாணவிகளையும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆசிரியர்கள் சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 3 மாணவிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

978 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4797 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2622 views

பிற செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு...

தஞ்சை அருகே காவல் உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

5 views

இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவம் : பெண்ணின் தாய் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம்

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

29 views

சென்னையில் மாணவர்கள் இடையே மோதல் : அரசுப் பேருந்து கண்ணாடிகள் அடித்து உடைப்பு

சென்னையில் அரசு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

28 views

புறா பிடிக்க சென்ற போது விபரீதம்: 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மாணவன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புறா பிடிக்க சென்ற போது, 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

19 views

மீனவர்களுக்கு வழிகாட்டும் 'நேவிக்' கருவி : இஸ்ரோ தயாரித்த தொழில்நுட்பம்

கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி துறைமுகங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான விசைப் படகுகள் உள்ளன.

4 views

சென்னையில் 11 மாதங்களில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல்...

சென்னையில் 515 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிக்கை அளித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.