8 வழி பசுமை சாலை திட்டப்பணிகள்- நில பரிவர்த்தனை மேற்கொள்ள தடை

8 வழி பசுமை சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் பட்டா நிலங்களில் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
8 வழி பசுமை சாலை திட்டப்பணிகள்- நில பரிவர்த்தனை மேற்கொள்ள தடை
x
சென்னை - சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கையகப்படுத்தப்பட உள்ள பட்டா நிலங்களின் சர்வே எண்ணில் எந்தவித நிலபரிவர்த்தனையும் மேற்கொள்ள வேண்டாம் என தடை விதித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் வருத்தம் தெரித்துள்ளனர். 8 வழி பசுமை சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின், எஞ்சிய நிலங்களை விற்கவோ, வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 


கையகப்படுத்தப்பட உள்ள பட்டா நிலத்தை ஒட்டிய நிலங்கள் ஏற்கனவே விற்கப்பட்டிருந்தாலும், தற்போது எந்தவித நிலபரிவர்த்தனையும் மேற்கொள்ள இயலாத நிலை உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்